Saturday, May 8, 2021

வாய்மூர் நாதர்

                                                     🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️


(⚜🕉    அப்பருக்கும் சம்பந்தருக்கும் திருநடனக்  காட்சி அருளிய வாய்மூர் நாதர். திருவாய்மூர் வாய்மூர் நாத விடங்கத் திருக்கோயில்.        






                              தலம் தோறும் சென்று தொண்டு புரிந்த சிறு பாலகரான திரு ஞான சம்பந்தருக்கும் திரு நாவுக்கரசருக்கும் திரு நடனக் காட்சி தந்தருளிய ஆடல் நாயகன் வாய்மூர்ப் பரம் பொருளுக்கு  இடது புறம் தெற்கு நோக்கி  அருள் புரிகிறார். நடராசர் சந்நிதி வாசலில் சுதைச் சிற்பங்களாகப் பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர்கள் உள்ளனர். திரு அதிகையிலிருந்து திருமறைக்காடு வரை பல திருத் தலங்களில் ஈசன் திருவருளால் சமணர்களின் கொலைக் கொடுமைகளை வென்று திருவடி கண்டு தலை மேல்  திருவடி பதிக்கப் பெற்று சாதனைகளும் அற்புதங்களும் புரிந்த அப்பர் பெருமான் முதல் முறையாகக் கண் குளிரக் கடவுளைக் கண்டது திருவாய்மூரில்தான். வேதாரண்யம் எனப்படும் திருமறைக் காட்டில் கோபுரக் கதவுகள் திறப்பதற்குத் தாமதம் ஆனதை நினைந்து வருந்திய அப்பர் மூன்று வயதிலேயே முற்றும் உணர்ந்த சிவஞான பாலகர் இருக்கும்போது தான் திறக்க முற்பட்டது தவறு என்று எண்ணி எண்ணி   மனக் கவலையுடன்   மறைக்காட்டு  மணாளரை நினைந்து கண்ணுறங்கினார். 

      🙏 மறைக்காட்டு மணாளர் உன்னி  உன்னி உறங்குகின்றேனுக்கு        திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வா என்று போனார்   (அப்பர்)

    என கனவில் திருவாய்மூர்ப் பெருமான் தோன்றி வாய்மூருக்கு வருமாறு அழைத்து அருளினார். அப்பரும் அவருடன் சம்பந்தரும் திருவாய்மூரை அடைந்தனர். 



       🏵  கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே  (அப்பர்) 

என செந்தமிழ் உறைப்புப் பாடி ஒரே பாடலில் கதவு அடைப்பித்த அருள் பாலகரோடு அப்பர் திருவாய்மூர்ப் பெருமானின் திருக்காட்சி கண்டு மகிழ்ந்தார். காட்சி அருளிய ஈசனுக்குக் காட்சி கொடுத்த நாதர் என்று திருநாமம். கிடைத்துள்ள அப்பர் திருப்பதிகம் இரண்டும்  திருஞான சம்பந்தருடன் அவர் பெற்ற தெய்வீக அனுபவங்களைக் கூறுகின்றன. திருஞான சம்பந்தர் பதிகமும் அவரும் அப்பரும் கண்டு களித்த ஆடல் நாயகனின் திருநடனக் காட்சியை அருமையாகக் காட்டுகிறது. சம்பந்தருக்கும் அப்பருக்கும் காட்சி கொடுத்த லிங்கப் பரம்பொருள் கருவறை  வாய்மூர்ப் பரம் பொருளுக்கு இடது புறம் மண்டபத்துடன் உள்ளது. வாய்மூர் விடங்கத் திருத்தலத்தில் வாய்மூர் வள்ளல், தியாக ராசர், காட்சி கொடுத்த நாதர் என்று மூன்று கருவறைகள் அடுத்தடுத்து வரிசையாக உள்ளன.


No comments:

Post a Comment