ஶ்ரீராம காவியம்
~~~~~
022
சூரிய குலம்...
★என்று காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் பிறகு வந்த வம்சாவளிகளை சூரிய குலம் என்று குறிப்பிட்டு அனைவரும் கூறுகின்றனர் . இந்து மதத்தின் தொன்மவியலின் அடிப்படையில் சூரியனுக்கும் சந்தியாதேவி அவர்களுக்கும் வைவஸ்தமனு என்ற மகன் பிறந்தார். இவர் தான் மனுஸ்மிதிரியை இயற்றியவர். விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக இங்கு அறியப் பெறுகிறார். இவருடைய பெயரனான இக்ஷ்வாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப்பெறுகிறது.
★இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் மிகுந்த புகழ்பெற்றவர்கள். மகாபாரதப் போரில் பிரகதபாலன் என்பவரை அபிமன்யு கொல்ல இவ்வம்சம் அழிந்ததாக கூறுகின்றனர். சிலர் இவ்வம்சத்தில் மருத் என்பவர் பிழைத்து அவரால் வம்சம் தழைத்ததாகவும் நம்புவதுண்டு.
★சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய ரகு வம்சம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
ராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா
1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின்
மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன்
-விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின்
மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின்
மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன்
-வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன்
-சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின்
மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா
26. அம்பரீஷாவின்
மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன்
த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின்
மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின்
மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின்
மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்
41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்
51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின்
மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2
65. ரகுவின் மகன் - அஜன்
66. அஜனின் மகன் - தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தி
இப்படி 68 பரம்பரை கொண்டது.
★ஶ்ரீராமரின் முன்னோர்களைப் பற்றி தெரிந்து கொள்வது மாபெரும் புண்ணியமல்லவா? இந்தப் பட்டியலில் இருக்கும் சில அரசர்களைப் பற்றி அறிந்து கெள்வது மிகவும் அவசியம். ஶ்ரீராம காவியத்தில் தகுந்த இடம் பார்த்து அவர்களின் சரிதத்தை பதிய உத்தேசித்து உள்ளேன்.
ஜெய் ஶ்ரீராம்!
No comments:
Post a Comment